• Wed. Apr 29th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

கையூட்டுக்காக பந்தாடப்படும் துப்புரவுப்பணியாளர்கள்…

Byadmin

Aug 4, 2021

தேனி மாவட்டத்தில் அனைத்து தூய்மைப்பணி தொழிலாளர்கள் ஏ.ஐ.டி.யு.சி. சங்கம் சார்பாக புதன் அன்று ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தூய்மைப்பணியாளர் சங்க மாவட்டச்செயலாளர் கே.பிச்சைமுத்து மாவட்டத்தலைவர் எம்.கர்ணன் ஏஐடியுசி. சுங்க மாவட்டத்தலைவர்கள் ராஜ்குமார் பாண்டி முருகேசன்உள்ளிட்ட நிர்வாகிகள் ஆட்சியரிடம் மனுக்கெடுத்தனர்.

நகராட்சி பேரூராட்சி ஊராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் தொகைக்கு ஏற்ப பணியாளர்கள் நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஒப்பந்த மற்றும் மகளிர் சுயஉதவிக்குழு தூய்மைப்பணியாளர்களிடம் கையூட்டு எதிர்பார்த்து பணி நீக்கம் செய்வதும் இடமாற்றம் செய்வதும் வேறு பணியாளர்களை நியமிக்கப்படுகிறார்கள். தவறும் செய்யும் மேஸ்திரிகள் மீது கொத்தடிமைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.