இராஜபாளையம் அருகே உள்ள சேத்து அம்பேத்கர் தெரு காமராஜர் நகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட இருவரை தட்டி கேட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து அலட்சியப்படுத்தியதல் வாலிபர் கொலை

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அடுத்துள்ள சேத்தூர் அம்பேத்கர் தெரு காமராஜர் நகர் பகுதி சேர்ந்தவர் கனி மனைவி முத்துமாரி என்பவர் வீட்டு அருகே நேற்று முன்தின இரவு உறவினர் ஒருவர் இறந்த நிலையில் வீட்டின் அருகே சிலர் மது அருந்தி உள்ளனர். அவர்களே வீட்டு அருகே அது அருந்தக்கூடாது என கண்டித்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தின இரவு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து வியாழக்கிழமை காலையில் தளவாய்புரம் காவல் நிலையத்தில் கனி மனைவி முத்துமாரி புகார் அளித்துள்ளார் புகார் எடுக்காமல் அலட்சியப்படுத்திய காவல்துறை,

இந்த நிலையில் புகார் அளித்த முத்துமாரியின் தம்பி காளிராஜ் மகன் மணிகண்டன் வயது 23 டிப்ளமோ படித்து முடித்துவிட்டு தந்தை காளிராஜ் நடத்தும் சிமெண்ட் கடையில் தந்தைக்கு உதவியாக இருந்து வருகிறார். இன்று மதியம் தந்தை வெளியே சென்று நிலையில் கடையை கவனித்துக் கொண்டிருந்த மணிகண்டனை அம்பேத்கர் தெரு காமராஜர் நகர் முத்துச்சாமிபுரம் பகுதியில் சேர்ந்த தங்கையா மகன் வயது 21 மாணிக்கம், அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் மகன் ஈஸ்வரன் வயது 18 ஆகிய இருவரும் கஞ்சா போதையில் கடைக்குள் புகுந்து சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடி உள்ளனர்.

உயிரிழந்த மணிகண்டனின் தந்தை காளிராஜ் வெளியே சென்று நிலையில் தனது கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை மொபைல் மூலம் பார்த்துள்ளார். அப்பொழுது தன் மகன் இரண்டு பேரால் குத்தி கொலை செய்வது கண்டு அதிர்ச்சியடைந்து வீட்டிற்கு தகவல் தெரிவித்துள்ளார் உடனடியாக அவர்கள் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் சேத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் உடலை கைப்பற்றி இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.





