• Sun. Aug 9th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

மதுரை அருகே முன்விரோதத்தில் இளைஞர் கொலை; 3 பேர் கைது..,

ByKalamegam Viswanathan

Jul 30, 2026

மதுரை மாவட்டம், சமயநல்லூர் உட்கோட்டத்திற்குட்பட்ட கடுப்பட்டி காவல் நிலைய எல்லையில் உள்ள தனியாருக்கு சொந்தமான தென்னை மரம் வெட்டும் தோட்டத்தில் இன்று கொலை சம்பவம் நடைபெற்றது.

முள்ளிப்பள்ளத்தைச் சேர்ந்த சஞ்சய் என்பவர், முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் விக்னேஷ்வரன், முத்தீஸ்வரன் மற்றும் சரவணப்பெருமாள் ஆகியோரால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேரையும் போலீசார் கைது செய்து, கடுப்பட்டி காவல் நிலையத்தில் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.