• Sun. Aug 9th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

கீரனூர் புனித சகாயமாதா நடுநிலைப்பள்ளிக்கு தொலைக்காட்சி பெட்டி வழங்கும் நிகழ்ச்சி..,

Byமுகமதி

Jul 30, 2026

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியில் உள்ள பாரம்பரியமிக்க குடும்பங்களில் ஒன்று கண்ணன் ஆசிரியர் குடும்பம். கல்வியில் வளர்ந்த குடும்பம் மட்டுமல்ல பல கல்வியாளர்களை உருவாக்கியும் வந்திருக்கிறார்கள்.

அதனால் அவர்கள் சார்ந்த பணிகள் பெரும்பாலும் கல்வி மேம்பாடு குறித்து அமைந்து வந்திருக்கிறது. இந்த நிலையில் தான் அமெரிக்காவின் தொழிலதிபரும் புதுக்கோட்டை மாவட்ட ரஜினி நற்பணி மன்ற அமைப்பாளருமான கே கே முருகபாண்டி அவர்கள் பாப்பாத்தி அம்மாள் கல்வி அறக்கட்டளை என்றொரு அறக்கட்டளையை தொடங்கி அதன் நிறுவனராக இருந்து நிர்வகித்து வருகிறார். அந்த அறக்கட்டளையின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் கல்வி மேம்பாட்டு பணிகளையும் செய்து வந்திருக்கிறார்.

இந்நிலையில் தான் இன்று பாப்பாத்தியம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பில் அதன் நிறுவனர் KK.முருகுபாண்டியன் BE MBA அவர்களின் ஏற்பாட்டில் கீரனூர் புனித சகாயமாதா நடுநிலைப்பள்ளிக்கு ரூ 3 லட்சம் மதிப்பீட்டில் SMART CLASS TV வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் KK.செல்லபாண்டியன் தலைமையேற்று திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் மேலும் சையது, சுபேர்தீன், ஜாபர், எழில் ராஜா, கனகமணி, அஸ்வின் உள்ளிட்ட முன்னாள் மாணவர்கள் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர்.