• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றம் அருகே இளைஞர் தூக்கிட்டு தற்கொலை…!

ByKalamegam Viswanathan

Sep 3, 2023

திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட பசுமலை அன்னை மீனாட்சி நகர் கோல்டன் சிட்டி 5-வது தெருவை சேர்ந்தவர் கனகராஜ். இவர் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மகன் விஜயகுமார் (வயது 30) பி.இ. பட்டதாரி, விஜயகுமார் வீட்டில் இருந்தபடியே வெளிநாட்டு நாய்களை வாங்கி விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் விஜயகுமார் உடல் நிலை சரியில்லாமல் கடந்த 30-ந்தேதி அன்று மதுரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையிள் உடல் பரிசோதனை செய்துள்ளார். அப்போது விஜயகுமாரிடம் உப்புச்சத்து அதிகமாக உள்ளது என்று மருத்துவர் கூறியதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் வீட்டுக்கு வந்த விஜயகுமார் தனது பெற்றோர்களிடம் தனக்கு உப்புச்சத்து அதிகமாக உள்ளது என்று மருத்துவர் தெரிவித்து விட்டனர் என்று கூறி வருத்தப்பட்ட உள்ளார்.

இந்த நிலையில்  விஜயகுமார் உப்புசத்து அதிகமாக இருந்தால் என்ன செய்யும்? என்று கூகுள் இணையதளத்தில் தேடி உள்ளார். உப்பு சத்து அதிகமாக இருந்தால் கூடிய விரைவில் உயிரிழக்க நேரிடும் என அதில் போடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த விஜயகுமார் வேதனையுடன் மன இறுக்கத்துடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று அவரது வீட்டின் மாடியில் தனது அறையில் ஜன்னல் கம்பியில் 
சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். நீண்ட நேரமாக விஜயகுமார் காணவில்லை என பெற்றோர்கள் காணவில்லை என தேடிய போது மாடியில் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்து சேர்த்துள்ளனர். அங்கு விஜயகுமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் முன்னதாகவே இறந்துவிட்டார் என்று தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து திருப்பரங்குன்றம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கூகுளில் உப்புச்சத்து அதிகமாக இருந்தால் உயிரிழக்க நேரிடும் என்பதை நம்பி இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருப்பரங்குன்றம் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.