• Tue. Apr 22nd, 2025

கற்பக விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா..!

ByKalamegam Viswanathan

Sep 3, 2023

சோழவந்தான் கற்பகம் கார்டன்ஸ் ஆர். எம். எஸ். காலனியில் உள்ள கற்ப விநாயகர் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, தென்கரை பாலாஜி பட்டர் தலைமையில் இரண்டு நாள் யாக பூஜை நடைபெற்றது. இவ்விழா முன்னிட்டு இன்று அதிகாலை இரண்டாம் கால யாக பூஜை தொடங்கப்பட்டு பூர்ணா குதி நடந்தது. இதைத் தொடர்ந்து புனித நீர் குடங்களை எடுத்து வலம் வந்து விநாயகருக்கு பல்வேறு அபிஷேகம் நடந்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஆர். எம். எஸ். காலனி குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் தலைவர் செல்வம் செயலாளர் தனசேகரன் பொருளாளர் செல்வன் மற்றும் குடியிருப்போர் நல சங்கம் சார்பாக விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டது.