மதுரை வளையங்குளம் வாலிபர் கொலை வழக்கில், அதே பகுதியை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். இளைஞர்களிடையே குடிபோதையில் 6 மாதத்திற்கு முன்பு ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்தது.
மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள நேற்று முன்தினம் இரவு வலையங்குளம் மயானத்தில் வாலிபர் தலையில் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இது குறித்து பெருங்குடி போலீஸார் வழக்கு பதிவ செய்து தேடி வந்தனர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வலையன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் மணியரசு இவரது மனைவி தனலட்சுமி இவர்களுக்கு வேல்முருகன் (வயது 26 ) .தேவி (வயது 24) என பிள்ளைகள் உள்ளனர்.
வேல்முருகன் நிமிந்தால் (கொத்தனர் உதவியாளராக) வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு எட்டு மணி அளவில் வீட்டில் உணவருந்தி விட்டு வேல்முருகன் வெளியே சென்றுள்ளார் .பின்பு வீட்டுக்கு வரவில்லை அதிகாலை 6 மணியளவில் வேல்முருகன் மயானத்தில் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதனை அடுத்து மணியரசு மற்றும் உறவினர்கள் வலையன் குளம் மயானத்தில் சென்று பார்த்த போது அங்கே வேல்முருகன் தலையில் கல்லால் நசுக்கி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனையடுத்து பெருங்குடி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
பெருங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். வேல்முருகன் இறந்து இடத்தின் அருகே ஆறு காலி மது பாட்டில்கள் கிடந்துள்ளது.
நண்பர்களுடன் மது அருந்திவிட்டு பின்னர் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா எனவும் வேறு ஏதேனும் முன் விரோதங்கள் காரணமாக உள்ளனவா என பெருங்குடி போலீசார் விசாரணை செய்து வந்தனர்.
வேல்முருகன் கொலை தொடர்பாக பெருங்குடி போலீஸார் தனிப்படை அமைத்து கொலையில் சந்தேகத்திற்குரிய வகையில் உள்ள 8 பேரை விசாரணை செய்தனர்.
அதில் வலையன்குளம் பகுதியை சேர்ந்த போஸ் என்பவரது மகன் மகேந்திரன் (வயது 26) என்பவருக்கும் வேல்முருகனுக்கும் இடையே கடந்த 6 மாதத்திறகு முன்பிருந்து தகராறு ஏற்பட்டுள்ளது.
வேல்முருகன் நேற்று முன்தினம் இரவு கண்மாய் கரைக்கு சென்று வந்த மகேந்திரனை கிண்டல் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகேந்திரன் மது அருந்திய வேல்முருகனுடன் தகராறு ஏற்பட்டு, அருகில் இருந்த கல்லால் தாக்கியதில் வேல்முருகன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சரிந்து விழுந்தார்.
இதனை அடுத்து மகேந்திரன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். மறுநாள் காலை இறந்த செய்தி ஊருக்குள் பரவியதும் ஒன்றும் தெரியாதவர் போல் ஊருக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருந்தார்.
வேல்முருகன் கொலை தொடர்பாக பெருங்குடி போலீசார் மகேந்திரனை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.