• Wed. Oct 7th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

மருத்துவ பணியாளர்களை தாக்கி, போதையில் அட்டகாசம் செய்த இளைஞரை கைது..,

ByP.Thangapandi

Oct 7, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூரில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் செல்லும் போது விபத்தில் சிக்கிய மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன், லண்டன் என்ற இரு இளைஞர்கள் 108 ஆம்புலென்ஸ் மூலம் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டனர்.,

முழு போதையில் இருந்த இருவரில் ராமச்சந்திரன் என்பவர், நண்பனுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க சொல்லி அன்றைய தினம் மருத்துவ பணியாளர்களை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.,

இது தகவலறிந்து விரைந்து வந்த போலீசாருடனும் வாக்குவாததில் ஈடுபட்டு மருத்துவ உபகரணங்களையும் உடைக்க முற்பட்டதுடன், எந்த சிறையில் போடுவீங்க, எல்லா சிறையும் பாத்துட்டு தான் வந்திருக்கோம், பாத்துக்கலாம் என அடாவடி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.,

இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனை தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் மருத்துவமனையில் அட்டகாசம் செய்த ராமச்சந்திரனை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.,