அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களின் ஏழ்மைநிலையை கருத்தில் கொண்டு ஏற்கனவே 2022 ஆம் ஆண்டு 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கான காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டு தொடந்து செயல்ப்பட்டு வந்தநிலையில் தற்போது 6.7 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களும் பயன்பெறும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டு பெருந்தலைவர் காமராசர் காலை உணவு திட்டத்தை சென்ற மாதம் 22ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு ச.ஜோசப் விஜய் அவர்கள் தொடங்கிவைத்தார்.

இதனை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதனை கண்காணிக்க செயல்முறைகள் வகுக்கப்பட்டுள்ள ஏஇயில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் சுயற்சி முறையில் கண்காணிக்க தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. காலை 8.30 முதல் 8.50 வரை மாணவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டு வழங்க வேண்டும் என்றும் அதற்கு முன்னர் கண்காணிப்பு ஆசிரியர் காலை உணவை சாப்பிட்டு சரிபார்த்த பின்னரே மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று செயல்முறைகள் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஒரு சில மாவட்டங்களில் தவறாக புரிந்துக் கொண்டு கண்காணிப்பு ஆசிரியர்கள் காலை 7 .00 மணிக்கே கண்காணிப்பு பணிக்கு வர வேண்டும் என்று வாய்மொழியாகவும் சுற்றறிக்கைய்யாகவும் உத்தரவு பிறப்பித்தனர் உத்தரவை ரத்து செய்து ஏற்கனவே 8.20 மணிக்கு கண்காணிப்பு ஆசிரியர் வருகை தர அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சா.அருணன் அவர்கள் ஊடகம் மற்றும் பத்திரிகை வாயிலாக அறிக்கையின் மூலம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு ஆ.ராஜ்மோகன் அவர்களுக்கும், மதிப்புமிகு பள்ளிக்கல்வி செயலாளர் அவர்களுக்கும், மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அவர்களுக்கும் , தொடக்கக்கல்வித்துறை இயக்குநர் அவர்களுக்கும் கோரிக்கை வைத்தார்.

இந்தநிலையில் மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அவர்களின் அறிவுறுத்தல் படி இணை இயக்குநர் மதிப்புமிகு எஸ்.ஜெயக்குமார் அவர்கள் அலைபேசியில் தொடர்புக் கொண்டு எந்த மாவட்டத்தில் காலை 7.00 மணிக்கு ஆசிரியர்களை பள்ளிக்கு கண்காணிக்க வர அறிவுறுத்த பட்டியிருக்கிறார்கள் என கேட்டார். எதற்காக 7.00 மணிக்கு வர வேண்டும் இயக்குநர் செயல்முறையில் எப்படி ஏதும் குறிப்பிட வில்லையே என்றார் அதன் பின்னர் திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மதிப்புமிகு ஆர்.அறிவழகன் அவர்கள் தொடர்புக் கொண்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரத்தை குறிப்பிட்டு சொல்லவில் கண்காணிப்பு ஆசிரியர் மாணவர்கள் சாப்பிடுவதற்கு முன்னர் சாப்பிட்டு பார்த்து மாணவர்களுக்கு பரிமாற வேண்டும் என தெரிவித்தார் இனி கண்காணிப்பு ஆசிரியர் காலை 8.20 வருகை தந்து தான் முதலில் வந்து பின்பு மாணவர்களுக்கு பரிமாற வேண்டும் என தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மதிப்புமிகு ச.கவிதா அவர்களின் அறிவுறுத்தலின்படி திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மதிப்புமிகு ஆர்.அறிவழகன் அவர்கள் ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தொடக்கல்வி இயக்குநர் செயல்முறைபடி கண்காணிப்பு ஆசிரியர்கள் 8.30 மணிக்கு முன்பாக வருகைந்து மாணவர்கள் வருகைக்கு ஏற்ப மாணவர்களுக்கு காலை உணவை கவனத்துடன் வழங்கினால் போதுமானது என தெரிவித்து ஆசியர்களின் சிரமத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மதிப்புமிகு ஆர்.அறிவழகன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.





