• Fri. Mar 24th, 2023

இது உங்களுக்கே ஓவரா தெரியல. . . கொட்டும் மழையிலும் உடற்பயிற்சி

கொட்டும் மழையிலும் உடற்பயிற்சி செய்யும் நடிகை சாக்‌ஷி அகர்வாலின் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


பெங்களூருவில் மாடலாக இருந்து வந்த சாக்‌ஷி அகர்வால், காலா, டெடி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ரியாலிட்டி ஷோ மூலம் மக்களிடம் புகழடைந்த சாக்‌ஷி அகர்வால், ஒர்க் அவுட் வீடியோக்கள், கவர்ச்சி புகைப்படங்கள் என சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளியிட்டு வருவார்.

அந்த வகையில், தற்போது வீட்டின் மொட்டை மாடியில் கொட்டும் மழையிலும் வெறித்தனமாக உடற்பயிற்சி செய்து, அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “உங்களோட கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லை” என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *