• Tue. Aug 4th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

உங்களால ஒரு செங்கலை கூட நட முடியாது… துரைமுருகன் சவால்…

Byகாயத்ரி

Mar 26, 2022

தமிழகத்தின் அனுமதியின்றி மேகதாதுவில் கர்நாடகாவால் ஒரு செங்கலை கூட நட முடியாது என அமைச்சர் துரைமுருகன் பேச்சு.

தமிழக கர்நாடக மாநிலங்களுக்கு இடையே மேகதாது அணை விவகாரம் பல ஆண்டுகளாக நடந்து வரும் நிலையில் தற்போது கர்நாடக மாநிலம் மேகதாது அணை கட்டுவதில் தீவிரமாக உள்ளது. இந்நிலையில் மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்தும் வகையில் தமிழக சட்டசபையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு அளித்தது. மேகதாது அணைக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதற்கு கண்டனம் தெரிவித்து கர்நாடக பேரவையில் மேகதாது அணை கட்டப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இது குறித்து அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது, தமிழகத்தின் அனுமதியின்றி மேகதாதுவில் கர்நாடகாவால் ஒரு செங்கலை கூட நட முடியாது. மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.