முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துச்சொல்லவும், அவருடன் செல்பி எடுத்துக்கொள்ளவும் புதுமையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மு.க.ஸ்டாலினை நேரில் சந்திக்க வேண்டும். அவருடன் செல்பி எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். சந்தர்ப்ப சூழல் எல்லோருக்கும் சாதகமாக அமையாது. தொண்டர்களின் இந்த ஏக்கத்தை போக்க நவீன தொழில் நுட்பத்தில் புதுமையான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகம் மட்டுமல்ல, நாடு முழுவதும் இருக்கும் நலம் விரும்பிகள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்க முடியும். 07127191333 என்ற தொலைபேசி எண்ணிற்கு அழைத்து தங்கள் வாழ்த்துக்களை பதிவு செய்யலாம். இந்த தொலைபேசி எண் இன்று முதல் 2-ந் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும். மெய்நிகர் சேவையை பயன்படுத்தி முதல்வருடன் புகைப்படம் எடுத்து தங்கள் வாழ்த்தையும் பதிவு செய்யலாம். www.selfiewithcm.com என்ற இணைய தளத்துடன் கியூ.ஆர்.குறியீடு இணைக்கப்பட்டுள்ளது. அதில் மு.க.ஸ்டாலின் பல்வேறு புகைப்படங்களோடு மக்கள் தங்கள் விருப்பப்படி மெய்நிகர் முறையில் செல்பி எடுத்து கொள்ளலாம். அந்த புகைப்படங்களை தங்களது சமூக ஊடகங்கள், வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஆகவும் வைத்து முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவிக்கலாம். முதல்முறையாக நவீன தொழில்நுட்ப முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.