மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி. நிறுவன பங்குகள் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளன.
ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு பிறகு, அதானி நிறுவனம் ஆட்டம் கண்டு வரும் நிலையில், அதானி குழுமத்தில் முதலீடு செய்த எல்.ஐ.சி. பங்கும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டை தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்கு விலைகள் 80 சதவீதம் வரை சரிவடைந்துவிட்டன. அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்ததால் லாபத்தில் இருந்த எல்.ஐ.சியின் முதலீடும் ரூ.50,000 கோடி சரிந்தது. ஜனவரி.30ம் தேதி கூட அதானி நிறுவனங்களில் செய்யப்பட்டுள்ள முதலீடுகள் ரூ.20,000 கோடி லாபத்தில் இருந்தன. இந்த சரிவின் காரணமாக எல்.ஐ.சி பங்கு வெளியீட்டின்போது ரூ.949 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்த பங்கு விலை இன்று ரூ.566 ஆக சரிந்துள்ளது.