கடைகளில் இருக்கையில் அமர்ந்து பணியாற்ற சட்டத்திருத்தம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
கடைகள், நிறுவனங்களில் நின்று பணியாற்றும் பணியாளர்கள், இருக்கையில் அமர்ந்து பணியாற்ற சட்டத்திருத்தம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 1947 ஆம் ஆண்டு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் செய்து சட்டமுன்வடிவு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்ட திருத்தத்தை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திட்டக்குடி கணேசன் தாக்கல் செய்தார்.