• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்விற்கு ஆகஸ்ட் 22- ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

ByA.Tamilselvan

Jul 21, 2022

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்விற்கு இன்று முதல் ஆக.22 வரை விண்ணபிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு தேவையான ஊழியர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு மூலம் தேர்வு செய்து வருகிறது. இதற்காக பல்வேறு போட்டித்தேர்விகள் மற்றும் நேர்காணல் ஆகியவை நடத்தப்படுகிறது.
அந்த வகையில், துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய 6 பதவிகளில் காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல் நிலைத்தேர்வு வரும் அக்டோபர் 30-ம் தேதி நடைபெறுகிறது.இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிக்கையில், துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளர், ஊரகவளர்சித்துறை துணை இயக்குநர்,மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய 6 பதவிகளில் காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 முதல் நிலைத்தேர்வு அக்டோபர் 30-ம் தேதி நடைபெறும். இன்று முதல் ஆகஸ்ட் 22-ம் தேதி வரை http://tnpsc.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் முதன்மை தேர்வு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.