நல்ல திறமையான நடிகை என்ற பெயர் பெற்ற சாய்பல்லவியின் நடிப்பில், சமீபத்தில் வெளியான கார்கி திரைப்படம் பலரின் பாராட்டுகளை பெற்று வரும் நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க மறுத்து வாய்ப்பை நழுவ விட்டதாக சினி வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
சாய்பல்லவி நடித்த காhகி திரைப்படத்திற்குப் பிறகு, அவருக்கு அவருக்கு பல புது பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இருப்பினும் சாய் பல்லவி ஒவ்வொரு கதைகளையும் மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்து வருகிறார். இந்நிலையில் அவர் தவறவிட்ட ஒரு திரைப்படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது மணிரத்தினம் கார்த்தியை வைத்து காற்று வெளியிடை என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார் அதில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை அதிதி ராவ் நடித்திருந்தார். ஆனால் முதலில் மணிரத்தினம் அந்த கேரக்டரில் நடிக்க சாய்பல்லவியை தான் தேர்ந்தெடுத்திருந்தார்.
சாய்பல்லவியும் முதலில் அந்த படத்தில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார். ஆனால் இடையில் ஏற்பட்ட சில தடங்கல்களின் காரணமாக அவருக்கு அந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போனது. அதன் பிறகு தான் மணிரத்தினம் அதிதி ராவை அந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்திருக்கிறார்.
மணிரத்னம் போன்ற ஒரு ஜாம்பவானின் இயக்கத்தில் நடிப்பதற்கு பல நடிகைகளும் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். அவருடைய இயக்கத்தில் சிறு கதாபாத்திரம் கிடைத்தால் போதும் என்று பலரும் காத்துக் கொண்டிருக்கும் போது சாய் பல்லவி கைக்கு வந்த வாய்ப்பை தவறவிட்டது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.