• Thu. Dec 5th, 2024

இன்று மாலை வீடு திரும்புகிறார் ஓபிஎஸ்

ByA.Tamilselvan

Jul 21, 2022

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஓ.பன்னீர்செல்வம் இன்று வீடுதிரும்ப உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 4 நாட்களாக சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.கடந்த 18-ம் தேதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் வாக்குப் பதிவின் போது அவர் கவச உடை அணிந்து வாக்களித்தார். இந்த நிலையில், சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து இன்று மாலை வீடு திரும்ப உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *