• Tue. Jul 21st, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

மே.20 வரை நீட் தேர்வுக்கு விண்ணபிக்கலாம்

ByA.Tamilselvan

May 16, 2022

மருத்துவ கல்லூரி படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை நீட் தோ்வு மூலம் நடைபெற்று வருகிறது.
2022-23-ஆம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான நீட் தோ்வு வரும் ஜூலை 17-ஆம் தேதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டது. நீட் தோ்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிப்பது கடந்த ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.மே மாதம் 6-ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மே 15ஆம் தேதி வரை விண்ணப்ப தேதி நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்றுடன் விண்ணப்பிக்கும் தேதி முடிவடைய இருந்த நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மே 20ஆம் தேதி இரவு 9 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.தற்போது வரை நீட் தேர்வுக்கு 20 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் www.neet.nta.nic.in என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்.