• Sun. Oct 25th, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்த அமைச்சர் சிடி.நிர்மல் குமார்..,

ByKalamegam Viswanathan

Oct 25, 2026

மதுரை மாவட்டம் செக்கானூரணியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை எரிசக்தி துறை அமைச்சர் சிடி நிர்மல் குமார் திறந்து வைத்தார் இந்த பேருந்து நிலையத்தில் ஏழு பேருந்து நிறுத்துமிடங்கள் 27 வணிக கடைகள் 2 உணவகங்கள் ஆண்களுக்கான இரண்டு காத்திருப்பு அறைகள் பாலூட்டும் தாய்மார்களுக்கான பாலூட்டும் அறைகள் ரெண்டு காத்திருப்பு அறைகள் ஒரு போக்குவரத்து அலுவலகம் ஒரு காவல்துறை அலுவலகம் ஆண் பெண் இரு பாலருக்கான கழிப்பறை வசதிகள் மற்றும் 21 காய்கறி சந்தை கடைகள் உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது இந்த நிகழ்ச்சியில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் விஜய் மகாலிங்கம் மதுரை மேற்கு சட்டமன்ற உறுப்பினர் எஸ் ஆர்.தங்கபாண்டியன் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம் வி கருப்பையா திருமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் ரங்கநாதன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார் கூறும்போது

செக்கானூரணி பேருந்து நிலையப் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது உசிலம்பட்டி பேருந்து நிலையப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது கடந்த ஐந்து ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் உசிலம்பட்டி பேருந்து நிலையம் பணிகள் முடிக்கப்பட்டு திறக்கப்படும்

நூற்றுக்கணக்கான கிராமங்களை இணைக்கும் முக்கியப் பகுதியாக உள்ள செக்கானூரணியில், கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்டு பாதியில் நின்ற பேருந்து நிலையப் பணிகள் தற்போது முடிக்கப்பட்டுள்ளன. முதலமைச்சரின் உத்தரவின்படி பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டுள்ளது

தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மதுரையில் மழைநீர் தேங்கும் பகுதிகளில் புதிய குழாய்கள் அமைத்து, மழைநீர் விரைவாக வெளியேற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கைப் பொறுத்தவரை, குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. செஞ்சியில் காணாமல் போன குழந்தையை மீட்கத் தனிப்படைகள் அமைத்து விசாரணை நடைபெற்று வருவதுடன், போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ரேஷன் கடைகளில் தரமான சன்னரக அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை ஏழை, எளிய மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கக் கூடுதல் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், 32 இடங்களில் தற்காலிகக் கழிப்பறைகள், குடிநீர் வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பருவமழைக் காலத்தில் மின்கசிவு மற்றும் மின்சார விபத்துகளைத் தடுக்கும் வகையில், தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளைச் சீரமைப்பதுடன், பொதுமக்களின் புகார்கள் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

வைகை அணையில் போதிய அளவு நீர்மட்டம் வந்தவுடன் விவசாயத்திற்காக தண்ணீர் திறக்கப்படும்

இவ்வாறு கூறினார்