மதுரை நாகமலை புதுக்கோட்டை – கிழக்குயில்குடி விலக்கு அருகே நேற்று மாலையில் அதிவேகமாக வந்த லாரி, இருசக்கர வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடி வரும் நிலையில் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திலேயே இருவர் பலி
மதுரை சக்கிமங்கலத்தைச் சேர்ந்த காசிம் அவர்களின் மகன்களான சையது அபுதாகிர் (47) மற்றும் சையது இப்ராகிம் (40) ஆகிய இருவரும் பெயிண்டிங் தொழிலாளிகள். நேற்று கிழக்குயில்குடி பகுதியில் பெயிண்டிங் வேலையை முடித்துவிட்டு, மாலையில் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
கிழக்குயில்குடியில் இருந்து நாகமலை புதுக்கோட்டை நோக்கிச் செல்லும் சாலையில் வந்தபோது, எதிரே நாகமலை புதுக்கோட்டையிலிருந்து கட்டுப்பாடில்லாமல் அதிவேகமாக வந்த லாரி, சையது அபுதாகிர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் சையது அபுதாகிர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடன் வந்த சையது இப்ராகிம் படுகாயமடைந்தார்.

இதனைத் தொடர்ந்து, கட்டுப்பாட்டை இழந்த அந்த லாரி சாலையோரம் நின்றுகொண்டிருந்த மேலக்கோட்டையைச் சேர்ந்த ஜெயராமன் (54) என்பவர் மீதும் பயங்கரமாக மோதியது. இதில் ஜெயராமனும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
CCTV காட்சிகள் வெளியீடு & பொதுமக்கள் குற்றச்சாட்டு
லாரி இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தும் அதிர்ச்சி அளிக்கும் CCTV காட்சிகள் தற்போது வெளியாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லாரி அதிவேகமாகவும் கட்டுப்பாடின்றியும் இயக்கப்பட்ட விதம் மற்றும் விபத்து நடந்த முறையைப் பார்த்து, “லாரி ஓட்டுநர் மதுபோதையில் வாகனத்தை ஓட்டி வந்திருக்கலாம்” என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் நேரில் பார்த்தவர்கள் பலத்த சந்தேகம் தெரிவித்து குற்றம் சாட்டுகின்றனர்.
போலீசார் தீவிர விசாரணை
விபத்து நடந்தவுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் படுகாயமடைந்த சையது இப்ராகிம் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
விபத்தை ஏற்படுத்திய பின்னர் லாரியை நிறுத்திவிட்டு ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இச்சம்பவம் குறித்து நாகமலை புதுக்கோட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, உயிரிழந்தவர்களின் உடல்களை உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள லாரி ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடி வரும் , ஓட்டுநர் மதுபோதையில் லாரியை இயக்கி விபத்தை ஏற்படுத்தினாரா என்ற கோணத்திலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

விபத்து மற்றும் கொலை தற்கொலை செய்யும் இடங்களை எந்தவித பிரதிபலமும் எதிர்பாராமல் தனது சொந்த செலவில் நேதாஜி ஆம்புலன்ஸ் உரிமையாளர் ஹரிகிருஷ்ணன் சிறப்பான முறையில் பணியாற்றி வருகிறார் தேவை இவரது சேவையானது ஆதரவற்ற பிரேதனங்களையும் அவரது சொந்த செலவேலையே அடக்கம் செய்து வருகிறார் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் அயோத்தி படம் வந்ததல்லவா இவருடைய சொந்த கதை அது அதைத்தான் சசிகுமார் அவர்கள் படமாக எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இவருக்கு நாம் இன்னும் நம்மால் இயன்ற பண உதவியும் கொடுத்து இவரது சேவை நம் பாராட்ட வேண்டும்.




