எச்.வினோத் இயக்கத்தில், போனிகபூர் தயாரித்து அஜித் நடித்த திரைப்படம் தான் வலிமை. இதில் யுவன் இசையமைக்க அஜித்துக்கு ஜோடியாக நடிகை ஹீமோ குரோஷி நடித்திருந்தார்.
இந்த படம் கடந்த 24ஆம் தேதி ரிலீசாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில் வெளியான திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்தனர். இந்த படத்தை பார்த்துவிட்டு பல பிரபலங்களும் படக்குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்து வரும் நிலையில், நடிகர் அஜீத்குமாரை புகழ்ந்து நடிகை குஷ்பூ பதிவிட்டுள்ளார்.
அதில் உனக்கும் மட்டும் தான் கூட்டம் வருது! என்றும் போனி கபூர் மற்றும் வினோத் இருவருக்கும் தனது வாழ்த்துக்களையும் குஷ்பு தெரிவித்துள்ளார்.