• Tue. Apr 23rd, 2024

12ம் வகுப்பு முடித்த மாணவரா நீங்கள் .. உங்களுக்குத்தான் இந்ததகவல்

Byகாயத்ரி

May 23, 2022

நீட் நீட் என்று அனைவரும் டாக்டராகி ஊசி போட வேண்டும் என்பது தான் உங்களது எதிர்கால திட்டமா .மருத்துவராகும் கனவு நல்லது தான்.ஆனால் உங்கள் எதிர்காலத்தை வளமானதாக்க பல நல்ல படிப்புகளும்,கல்லூரிகளும் உள்ளன.
சரி உங்களில் எத்தனை பேருக்கு திருவாரூர் CentralUniversity பற்றிய விவரம் தெரியும்…?
அப்படித் தெரியவில்லை என்றால் இதோ தெரிந்துகொள்ளுங்கள்.மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பாக மத்திய அரசால் மாநிலத்துக்கு ஒன்றென “மத்திய பல்கலை கழகம்” என்ற பெயரிலேயே பதிமூன்று பல்கலை கழகங்கள் (சென்ட்ரல் யுனிவர்ஸிட்டிகள்) நடத்தப்பட்டு வருகின்றன. இது போக, அஸ்ஸாம் பல்கலைகழகம், சில்சார் அஸ்ஸாம் மாநிலம், பாபா குலாம் ஷா பாதுஷா பல்கலை கழகம் ராஜோரி, ஜம்மு காஷ்மீர் மாநிலம், பெங்களூரு டாக்டர் அம்பேத்கார் ஸ்கூல் ஆஃப் எக்கானமிக்ஸ் யூனிவர்ஸிட்டி, காலிக்கோட் பல்கலை கழகம் பேரம்பூர் ஒடிஸா மாநிலம் சர்தார் படேல் யூனிவர்ஸிட்டி ஆஃப் போலீஸ் செக்யூரிட்டி மற்றும் கிரிமினல் ஜஸ்டிஸ் ஜோத்பூர் என ஐந்து யூனிவர்ஸிட்டிகளும் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் நடத்தப்படுகின்றன.
பொதுவாக இந்த பல்கலைகழகங்களைப் பற்றிய விவரங்கள் தமிழ்நாட்டில் நிறைய மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தெரியவே இல்லை. தமிழ்நாட்டில் இந்த பல்கலைகழகம் திருவாரூர் அருகே இருக்கிறது. இந்த பல்கலைகழகம் ஒவ்வொரு வருடமும் இருநூறு மாணவர்களுக்கு இண்டக்ரேட்டட் கோர்ஸூகளுக்கானஅட்மிஷன் தருகிறது.
Integrated MSc (Chemistry, Physics, Maths , Life Sciences) , Integrated MA EXONOMICS. இது போக மாஸ்டர்ஸ் டிகிரி கோர்ஸூகளும் எம்பிஏ கோர்ஸுகளும் பிஎச்டி கோர்ஸுகளும் தனித்தனியே நடத்தப்படுகின்றன. இங்கே படிக்கும் மாணவர்களில் பாதி பேர் கேரளாவைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். மீதிப்பேரில் மற்ற மாநிலத்தவர்கள் இருக்கிறார்கள் தமிழ்நாடு உட்பட.
ஒரு செமஸ்டருக்கு பீஸ் என்று பார்த்தால் முவாயிரத்திலிருந்து எட்டாயிரத்துக்குள் வருகிறது.
இது போக ஆண்கள் பெண்களுக்கு தனித்தனி ஹாஸ்டல் வசதியும் இருக்கிறது. ஹாஸ்டல் கட்டணங்களும் மிக மிக குறைவே.ஆனால் இப்படி ஒரு கல்வி நிறுவனம் இருப்பது தமிழ்நாட்டில் நிறைய பெற்றோர்களுக்கு மாணாக்கர்களுக்கு தெரியவே இல்லை என்பது வருத்தத்துக்குரிய விசயம்.
18 மத்திய பல்கலை கழகங்ளில் எந்த பல்கலைகழகத்திலும் வேண்டுமானாலும் சேர்ந்து படிக்க
ஒட்டு மொத்தமாக ஒரே ஒரு நுழைவுத் தேர்வு தான் நடத்தப்படுகின்றது. cucetexam. Central University common entrance exam.
+2 முடித்து அறுபது சதவீத மதிப்பெண் பெற்றிருந்தாலே போதுமானது. நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு கவுன்ஸிலிங் மூலம் மாணாக்கர்களின் விருப்பத் தேர்வுகளுக்கு தக்க அட்மிஷன் வழங்கபடுகின்றன.நேற்று முதல் இந்த தேர்வுக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். www.cucetexam.nic.in மேலும் எல்லா விவரங்களும் இந்த தளத்தில் இருக்கின்றன. எந்தெந்த பல்கலை கழகங்களில் என்னென்ன கோர்ஸூகள் நடத்துகிறார்கள் என்பதை அறிய அந்தந்த பல்கலை கழகத்தின் இணைய தளத்தில் சென்று பார்க்கலாம். பல்கலை கழகங்களின் பெயர்களும் இணைய தள முகவரியுடன் மேற் சொன்ன தளத்திலேயே விவரங்கள் பெற்றுக் கொள்ளலாம்.மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகள் குறித்த கூடுதல் விவரங்களை அறிய விண்ணப்பிப்பது தொடர்பான தொழில்நுட்பப் பிரச்னைகளுக்கு 011- 40759000 எனும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பெறலாம்.
படிப்புகள், கல்வித்தகுதி உள்ளிட்ட கூடுதல் தகவல்களுக்கு அசாம் – 9476897510, 9401847943 ஆந்திரப்பிரதேசம் – 9640884806, 7598413970, குஜராத் – 079 – 23977446, அரியானா – 9212884894, ஜம்மு – 8082197957, 9796665505, 8178118948, ஜார்கண்ட் – 7070630510, கர்நாடகா – 9972191661, 9242355484, கேரளா – 0467 – 2309467, 0467 – 2309460, பஞ்சாப் – 9464269330, இராஜஸ்தான் – 7014588311, தெற்கு பீகார் – 0631-2229514, 2229518, தமிழ்நாடு – 04366 – 277337 எனும் மத்திய பல்கலைக்கழகங்களின் அலைபேசி / தொலைபேசி எண்களில் அலுவலக நாள்களில் தொடர்பு கொண்டு பெறலாம்[email protected] எனும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொண்டும் தகவல்களைப் பெறமுடியும்.திருவாரூரில் மத்திய பல்கலைக் கழகத்தில் பயிற்சிக் கட்டணம் மிகவும் குறைவு. மேலும், இப் பல்கலையில் பயின்றால், மேற்படிப்பிற்காக நீங்கள் வெளிநாடுகளில் உள்ள யூனிவர்ஸிடி சென்றால் எவ்வித நுழைவுத் தேர்வும் எழுத வேண்டியதில்லை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *