• Wed. Apr 24th, 2024

மதுரையில் மரங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி யோகாசன நிகழ்ச்சி

Byகுமார்

Sep 5, 2022

மதுரையில் கலாம் பாரம்பரிய கழகம்சார்பில் மரங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது.
மதுரையில் கலாம் பாரம்பரிய கழகம்சார்பில் பல்லுயிர்களின் வாழ்வியல் மரங்களின் முக்கியத்துவத்தை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் பார்வதாசனா நிலையில்30 நிமிடங்கள் மரக்கன்றுகளை தூக்கி நிலையில் மற்றும் வீரபத்திராசனா நிலையில்இரண்டு மணி நேரம் சிலம்பம் சுற்றியபடிசோழன் உலக சாதனைமற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவர்கள் ஈடுபட்டனர்.


மதுரையில் கலாம் பாரம்பரிய கழகம் சார்பில் கூடல்நகர் பகுதியில்அமைந்துள்ள உள்ளரங்கத்தில் புதிய உலக சாதனை முயற்சியில் மாணவர்கள் ஈடுபட்டனர். இந்த நிகழ்ச்சிக்கு கலாம் பாரம்பரிய கலைக் கழகத்தின் நிறுவனர் சுந்தர் தலைமை தாங்கினார். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக சோழன் உலக சாதனை புத்தகம் நிறுவனர் நிமலன்நீலமேகம் கலாம் பாரம்பரிய கலைக்கழகத்தின் தலைவர் ராஜாமகேந்திரன் , திரைப்பட கதாநாயகன் குட்டிமணி மற்றும் இந்திய சிலம்ப ஆசான் மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள்அனைவருக்கும் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது .
அதனை தொடர்ந்து சோழன் உலக சாதனை புத்தகத்தின் நிறுவனர் நிமலன்நீலமேகம் செய்தியாளர்களிடம் கூறியதுபல்லுயிரிகளின் வாழ்வியல்மரங்களின் முக்கியத்துவத்தையும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இருக்கும் ஆரோக்கியத்தை சீர்குலைக்காமல் வாழ்வதற்கு யோகாசனங்கள் செய்வதன் நோக்கத்தினை வலியுறுத்தும் வகையிலும் தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான சிலம்பம் பற்றிய மாணவர்களிடம் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 40க்கும் மேற்பட்ட குழந்தைகள் பர்வதாசனா நிலையில் ஒரு கிலோ எடையுள்ள மரக்கன்றுகளை 30நிமிடம் சமநிலையில் வைத்திருந்தும்மேலும் 160 மாணவ மாணவிகள் வீரபத்திராசன நிலையில்தொடர்ந்து சிலம்பம் சுற்றி சாதனை படைத்துள்ளனர் எனக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *