கேரளாவில் ஆலப்புழா, எர்ணாகுளம், கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 64.5 மிமீ முதல் 115.5 மிமீ வரை மழை இப்பகுதிகளில் பதிவாகியுள்ளது. அதுபோல் கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு பலத்த மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று பெய்த கனமழையால் கேரள மாநிலத்தில் 5 பேர் உயிரிழந்தனர். காணாமல் போன 2 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மலைப்பாங்கான பகுதிகளில் நிலச்சரிவு, மண் சரிவு, திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அதிக அலை மற்றும் கடல் சீற்றம் காரணமாக இன்று கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு ஆகிய கடலோரப் பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படவுள்ளார்கள். இப்பகுதிகளில் மணிக்கு 40 முதல் 60 கி.மீ வேகத்தில் காற்று வீசவும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.