• Fri. Mar 29th, 2024

டெல்லியில் மோசமடையும் காற்று மாசு.. மக்களுக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை..!

Byவிஷா

Nov 13, 2021

டெல்லியில் காற்று மாசு மோசமான நிலைக்கு சென்றுள்ளதால், அவசர கால நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள அம்மாநில அரசுக்கு, மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.


டெல்லி மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள விளைநிலங்களில் எரிக்கப்படும் விவசாய கழிவுகளால், காற்று மாசு வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் தலைநகர் டெல்லி முழுவதும் புகை மண்டலமாகவே காட்சியளிக்கிறது. நடப்பாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு காற்றின் தரக்குறியீடு 471 ஆக பதிவாகி உள்ளதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்திருக்கிறது.


அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்கள் வாகன பயன்பாட்டை 30 சதவீதம் குறைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் அவசியம் இன்றி வெளியே வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். காற்று மாசு மேலும் அதிகரிக்காமல் இருக்க உரிய நடவடிக்கைகளை எடுக்கவும் அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *