• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ஈஷாவில் பிப்ரவரி 18-ம் தேதி உலகின் மிகப் பிரமாண்டமான மஹா சிவராத்திரி விழா

ByKalamegam Viswanathan

Feb 11, 2023

உலகின் மிகப் பிரமாண்டமான மஹா சிவராத்திரி விழா ஈஷாவில் பிப்ரவரி 18-ம் தேதி நடைபெற உள்ளது
உலகமெங்கும் மக்கள் விரும்பி நேரலையில் காணும் நிகழ்ச்சிகளில் கடந்த ஆண்டு ஆஸ்கர் மற்றும் கிராமி விருது வழங்கும் விழாக்களை பின்னுக்கு தள்ளிய ஈஷாவின் மஹா சிவராத்திரி விழா இந்த வருடம் பிப்ரவரி 18-ம் தேதி மேலும் பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது.ஆன்மீகத்திலும் பக்தியிலும் ஊறி திளைத்த கலாச்சாரமாக நம்முடைய பாரத கலாச்சாரம் திகழ்கிறது. திருவிழாக்களின் தேசமாக விளங்கும் நம் பாரத தேசத்தில் மஹா சிவராத்திரி விழா என்பது கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை அனைத்து மாநிலங்களிலும் கொண்டாடப்படும் விழாவாக உள்ளது.
யோக அறிவியலுடன் மிகவும் தொடர்புடைய இவ்விழா கோவை ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2023-ம் ஆண்டிற்கான மஹா சிவராத்திரி விழா வரும் பிப்ரவரி 18-ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை ஆதியோகி முன்பு பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.சத்குரு முன்னிலையில் நடைபெறும் இவ்விழா தியானலிங்கத்தில் நிகழ்த்தப்படும் பஞ்சபூத ஆராதனையுடன் தொடங்கும். லிங்க பைரவி தேவியின் மஹா யாத்திரை, உள்நிலையில் பரவசத்தில் ஆழ்த்தும் சக்திவாய்ந்த தியானங்கள், சத்குருவின் சத்சங்கம், கண்ணை கவரும் ஆதியோகி திவ்ய தரிசன காட்சி, பாரத பாரம்பரியத்தை பறைசாற்றும் புகழ்பெற்ற கலைஞர்களின் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளுடன் விழா விடிய விடிய களைக்கட்ட உள்ளது.
மஹாசிவராத்திரி இரவில் இருக்கும் கோள்களின் அமைப்பு, மனித உடலில் இயற்கையாகவே சக்தியை மேல் நோக்கி எழ செய்வதற்கு ஏதுவாக உள்ளது. எனவே, இந்த இரவில் ஒருவர் முதுகுதண்டை நேராக வைத்திருந்து விழிப்பாகவும், விழிப்புணர்வாகவும் இருந்தால் ஆன்மீகம் சார்ந்த மகத்தான பலன்களை பெற முடியும்.
இவ்விழா ஈஷாவின் அதிகாரப்பூர்வ யூ – டியூப் சேனலான Sadhguru Tamil–ல் நேரடி  ஒளிப்பரப்பு செய்யப்படும். மேலும், தமிழ், இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மராத்தி என பல்வேறு மாநில மொழிகளில் முன்னணி தொலைக்காட்சிகள் மற்றும் யூ – டியூப் சேனல்களிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. கடந்தாண்டு ஈஷா மஹாசிவராத்திரி விழாவை சுமார் 14 கோடி பேர் நேரலையில் பார்த்து உலக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.