• Fri. Apr 19th, 2024

நாகர்கோவிலில் சிறப்பாக நடைபெற்ற உலக மனநல நாள் நிகழ்ச்சி

ஒவ்வொரு ஆண்டும் 1992 ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 10 ஆம் தேதி உலக மனநல நாள் கொண்டா பட்டு வருகிறது. இந்தியாவில் 15 % பேர்கள் மன நோயால் பாதிக்கப்ட்டுள்ளதாவும், மனிதனின் மன ஆரோக்கியம் மற்றும் உலக நல்லெண்ணதிற்காகவே உலக மன நல தினம் ஆண்டு தோறும் கொண்டாடபட்டு வருவதாக இந்திய மன நல மருத்துவக்கழகம் அறிவித்து உள்ளது.

அந்தவகையில் இன்று உலகம் முழுவதும் உலக மனநல நாள் கொண்டாப்பட்டு வருகிறது. இத்தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாறு மறைமாவட்டத்தின் கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி மையத்தின் சார்பாக உலக மனநல நாள் நாகர்கோவிலில் இன்று நடைபெற்றது.

கோட்டாறு மறை மாவட்ட பேராயர் நசரேன் சூசை தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் அருள்பணியாளர்கள், ஆசிரியர்கள், கன்னியாஸ்திரிகள், மாணவ மாணவியர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவில் மனநலம் பேணிக்காப்பது நம் ஒவ்வொருவருடைய கடமையாக இருந்தாலும், இதில் ஆசிரியர்களின் பங்களிப்பு மிக முக்கியம். ஒரு மாணவரை வளரும் பருவத்தில் கல்வி மட்டுமல்ல ஒழுக்கத்தையும் கற்றுக் கொடுக்கும் சிற்பியாக ஒரு ஆசிரியர் விளங்கி வருகிறார். எனவே இந்த நிகழ்ச்சியில் இளைஞர்கள் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த விழாவாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த சமுதாயத்தில் போதை அடிமை, போட்டி பொறாமை, கோஷ்டி மோதல், வரதட்சணை கொடுமை, சிறுமிகள் பலாத்காரம் என மனநோயாளிகள் சமுதாயமாக இருந்து வருகிறது. உடல் நலத்தை எப்படி பேணிப்பாதுகாக்கிரமோ அதுபோல மன நலத்தையும் பேணி பாதுகாக்க அனைவரும் முன்வரவேண்டும். மன நல சமுதாயம் அமைய பாடுபட வேண்டும் என அருள்பணியாளர் நெல்சன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *