நேற்று மாலை 68வது சினிமா தேசிய விருதுகள் பட்டியல் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ் திரையுலகம் மொத்தம் 10 விருதுகளை பெற்றுள்ளது.
இதில்,
சிறந்த தமிழ் படம் – ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’,
சிறந்த பின்னணி இசைக்காக – சூரரைப் போற்று (ஜி.வி பிரகாஷ்)
சிறந்த எடிட்டிங் – சிரவஞ்சனியும் இன்னும் சில பெண்களும் (ஸ்ரீகர் பிரசாத்)
சிறந்த திரைக்கதை – சூரரைப் போற்று (ஷாலினி உஷா நாயர், சுதா கொங்கரா)
சிறந்த வசனம் – மண்டேலா (மடோன் அஸ்வின்)
சிறந்த துணை நடிகை – லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி (சிரவஞ்சனியும் இன்னும் சில பெண்களும்)
சிறந்த நடிகை – அபர்ணா பாலமுரளி (சூரரைப் போற்று)
சிறந்த நடிகர் – சூர்யா (சூரரைப் போற்று)
சிறந்த அறிமுக இயக்குனர் – மண்டேலா (மடோன் அஸ்வின்),
சிறந்த படம் – சூரரைப் போற்று என 10 விருதுகள் தமிழ் திரையுலகம் பெற்றுள்ளது.
இந்நிலையில், உலகநாயகன் கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தேசிய விருது வென்ற அனைவருக்கும் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.