• Sun. Apr 2nd, 2023

செஸ் ஒலிம்பியாட் போட்டி: ஜூலை 28 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…

Byகாயத்ரி

Jul 23, 2022

சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்து வருகிறது. மேலும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் அனைத்து நாட்களிலும் சென்னை முதல் மாமல்லபுரத்திற்கு இலவச பேருந்துகளை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.சென்னையில் உள்ள மத்திய கைலாஷ் பகுதியில் இருந்து புறப்பட்டு சுற்றுலா பயணிகள் பார்க்க வாய்ப்புள்ள 19 இடங்களில் நின்று மாமல்லபுரம் சென்றடையும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதோடு தற்போது வெளியான தகவலின் படி மாமல்லபுரத்தில் ஒலிம்பியாட் போட்டி நடப்பதை முன்னிட்டு ஜூலை 28 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் ஜூலை 28 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என அமைச்சர் ஏ.வ.வேலு கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *