மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெரிய மறவன்குளம் கிராமத்தைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் 100 நாள் வேலை கேட்டு முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது .
மறவன் குளம் பஞ்சாயத்தில் உள்ள பெரிய மறவன்குளம் சின்ன மறவன் குளம் உள்ளிட்ட கிராம மக்களுக்கு 100 நாள் வேலையை பகிர்ந்து வழங்க வேண்டும் என கிராம மக்கள், ஒவ்வொரு கிராம சபை கூட்டத்தின் போதும் புகார் அளித்துள்ள நிலையில், ஊராட்சி எழுத்தர் விஜயன், தனக்கு சாதகமாக உள்ள சின்னமறவன்குளம் கிராமத்தைச் சார்ந்த பெண்களுக்கு மட்டும் போதிய அளவிற்கு 100 நாள் வேலையை ஒதுக்கி தருவதாகவும், பெரிய மறவன்குளத்தை சார்ந்தவர்களுக்கு ஆண்டுக்கு பத்து நாள் மட்டுமே வேலை அளித்து வருவதாக குற்றம் சாட்டி, ஊராட்சி எழுத்தரை இடமாற்றம் செய்யக் கோரியும், தங்கள் கிராமத்திற்கு 100 நாள் வேலையை நிரந்தரமாக அளிக்க கூறியும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
ஒன்றிய அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, நிரந்தரமாக 100 நாள் வேலை அளிக்க உறுதி அளித்ததன் பேரில் அங்கிருந்து மக்கள் கலைந்தனர்.