
சென்னை வடபழனி மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் சாலையில் சூழ்ந்துள்ள வெள்ள நீர் வாகன ஓட்டிகள் கடும் அவதி.
சென்னை வடபழனி குமரன் காலனி மற்றும் அதை சுற்றி உள்ள சாலைகளில் சூழ்ந்து நிற்கும் வெள்ள நீர் இதனால் அப்பகுதி வழியாக வரும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள் ஆளாகின்றனர்.
வடபழனி பேருந்து நிலையத்தில் தேங்கும் தண்ணீரை மழை நீர் கால்வாயில் விடாமல் அந்த தண்ணீரை பொது வழி சாலையில் திறந்து விடுவதால் வெள்ளம் சூழ்ந்து நிற்க காரணம் என்று அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வடபழனியில் இருந்து இருந்து கோயம்பேடு செல்லும் முக்கிய பகுதியான 100 அடி சாலையில் மாநகராட்சி பணியினை தொடங்கி அதை முடிக்காமல் அப்படியே பாதியில் விட்டு செல்லும் அலட்சியத்தினால் குறுகலான பாதையில் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்குள் ஆகின்றனர் அந்த குறுகிய ரோட்டில் பேரிக்காடும் போட்டு வைத்து அருகிலேயே பள்ளமும் தோண்டி வைத்திருப்பது பொதுமக்களுக்கு அபாயகரமாகவும் உள்ளது
பேருந்து ஓட்டுநர்களும் வாகனத்தை இயக்க மிகவும் அவதிகுள்ளாகிறோம் என்று வேதனையோடு தெரிவித்தனர்.

