திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்குட்பட்ட 14 வார்டு அண்ணா நகர் பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக தண்ணீர் வராததால் இப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திடீரென காலி குடத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த பல்லடம் காவல்துறையினர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
நகராட்சி அதிகாரிகள் மாலை 6:00 மணிக்கு தண்ணீர் விடுவதாக உறுதி அளித்த பின்பு பொதுமக்கள் அங்கிருந்து கலந்து சென்றனர். நகராட்சி நிர்வாகம் அண்ணா நகர் பகுதி பொது மக்களுக்கு குடிநீர் வழங்காததால் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென காலி குடத்துடன் சாலை மறியல் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.