• Fri. Oct 9th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகை..,

ByKalamegam Viswanathan

Oct 9, 2026
 மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் கிராமத்தைச் சார்ந்த ஏராளமான பெண்கள், கடந்த சில மாதங்களாகவே குடிநீரின்றி ஒரு குடம் 15/- வ ரூபாய்க்கு வாங்கி பயன்படுத்தும் நிலை ஏற்படுவதை சுட்டிக்காட்டி ஏராளமான பெண்கள் காலி குடங்களுடன் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
     

அக்கிராமத்தில் மூன்று வருட காலமாக குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுது ஏற்பட்டதுடன், அதனை சரி செய்யாமல் ஊராட்சி செயலர் அலட்சியப் போக்கில் இருந்ததுடன், மக்களுக்காக குடிநீர் மற்றும் கழிவறைக்கு பயன்படுத்தக் கூட தண்ணீர் இன்றி அவதிப்படும் நிலைக்கு ஊராட்சி செயலரின் தனிப்பட்ட போக்கினால் கிராம மக்கள் பெரிதும் அவதியடைந்து வருவதாக கூறி ஒன்றிய அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 30 நிமிட போராட்டத்திற்குப் பிறகு உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் உறுதி அளித்ததையடுத்து கலைந்து சென்றனர்