திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த ரங்கசமுத்திரம் பகுதி சேர்ந்தவர் நதியா 33.இவர் தனியார் நிறுவனங்களின் கலெக்சன் ஏஜெண்டாக இருந்து வருகிறார். இந்த நிலையில் இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பல்லடம் பணப்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணத்தைப் பெற்றுக் கொண்டு வங்கியில் பணம் செலுத்த சென்று கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அவ்வழியே இரு சக்கர வந்த நபர்கள் அவரை வழிமுறைத்து கத்தியை காட்டி கைப்பையை பிடுங்கி சென்றதாக கூறப்படுகிறது.தொடர்ந்து இது குறித்து நதியா பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடம் விரைந்து சென்ற பல்லடம் போலீசார் அருகில் பதிவாகி இருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணையை துவக்கினர்.மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்க பல்லடம் டிஎஸ்பி சுரேஷ் தலைமையில் இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டது.அதன் படி வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தேனியில் பதுங்கி இருப்பதை கண்டறிந்த தனிப்படை போலீசார் அங்கு சென்று பதுங்கி இருந்த இருவரை பல்லடம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

தொடர்ந்து அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.அதன்படி நதியா வேலை செய்து வந்த நிறுவனத்தில் பிரவீன் குமார் என்பவரும் வேலை செய்து வந்ததாகவும் தொடர்ந்து பிரவீன் குமார் தனது சகோதரரான பிரகாஷ் மற்றும் அவரது நண்பருடன் சேர்ந்து நதியாவை நோட்டமிட்டு வந்ததாகவும்.பிரகாஷ்,பிரவீன் குமார் அவரது நண்பர் ஆகியோர் நதியாவிடம் பணத்தை கொள்ளை அடிக்க தேனியில் உள்ள தங்களது நண்பர்களை வரவழைத்ததாகவும் அதன்படி சம்பவத்தன்று தேனியை சேர்ந்த பாலாஜி மற்றும் குமார் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்று நதியாவிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து சம்பவத்தில் தொடர்புடைய பல்லடத்தைச் சேர்ந்த பிரவீன் குமார் பிரகாஷ் ஆகியோரை கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்து ஒரு இரு சக்கர வாகனம் மற்றும் ஒன்பது லட்சம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.தொடர்ந்து சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒருவரை வலை வீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் பல்லடம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






; ?>)
; ?>)
; ?>)
