• Tue. Aug 4th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

கோவையில் மது போதையில் வாலிபர் அடித்து கொலை!5 பேர் கைது !!!

BySeenu

Feb 25, 2026

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளைய அருகே உள்ள பெட்டராபுரம் பகுதியைச் சேர்ந்தவர். அந்தோணி-40 கடந்த 15  ஆம் தேதி  வெட்டுதாபுரம் அண்ணா நகர் காட்டுப் பகுதியில் அவரது உறவினர்கள் சிவக்குமார், சேகர் என்கிற நாய் சேகர், பச்சையன், சூர்யா மற்றும் ஜீவா ஆகியோருடன் மது அருந்தி உள்ளார். 

அப்போது பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக அவர்களுக்குள் போதையில் தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது அவர்கள் அனைவரும் சேர்ந்து அந்தோணியை கைகளாலும் குச்சியாலும் தாக்கி உள்ளனர். அதன் பிறகு அவர்கள் குடும்பத்தினரிடம் மயக்கம் அடைந்து கிடப்பதாக கூறி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மனைவி சரண்யா தேவி உறவினர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர்.
முதலில் அவர்கள் மயக்கம் என்று கூறியதால் அதை நம்பி உள்ளனர்.

 ஆனால் அதன் பிறகு அந்தோணியின் உடலில் முதுகு பகுதி மற்றும் வலது கால் தொடை பகுதியில் அடித்ததற்கான காயங்கள் இருந்து உள்ளது. 

 இதனால் குடும்பத்தினர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்று உள்ளனர்.

அந்தோணியை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறி உள்ளனர். இதுகுறித்து அந்தோணியின் மனைவி சரண்யா தேவி பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். காவல் ஆய்வாளர் ராஜேஷ் கண்ணன், அந்தோணி மனைவி சரண்யா தேவி கொடுத்த புகாரின் பேரில் அந்தோணி தாக்கப்பட்ட கொலை வழக்காக மாற்றம் செய்தார். 

சம்பவத்தன்று அந்தோணியை தாக்கிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

 இன்று அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பிறகு கோவை மத்திய சிறையில் அடைத்தனர்..