• Sat. Feb 15th, 2025

அலுவலகத்தில் மயங்கி விழுந்த பெண் உயிரிழப்பு

BySeenu

Jan 23, 2025

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மயங்கி விழுந்த பெண் தலையில் அடிபட்டு உயிரிழப்பு – காவல் துறை விசாரணை !!!

கோவை அருகே உள்ள வடமதுரை அப்பநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவருடைய மனைவி ராஜேஸ்வரி. இவர்களது மகள் பானுப்பிரியா இவருக்கு திருமணம் ஆகி ராஜ்குமார் என்ற கணவர். ஒரு மகன் உள்ளார். ராமமூர்த்தி கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் குடிநீர் பிரிவில் ஊழியராக வேலை செய்து வந்தார். அவருக்கு திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிர் இழந்தார். எனவே பென்ஷன் தொடர்பாக கேட்பதற்காக ராஜேஸ்வரி மாநகராட்சி அலுவலகத்திற்கு செல்ல முடிவு செய்தார். இதற்காக அவர் தனது மகள் பானுப்பிரியாவுடன் சென்றார். கோவை டவுன்ஹாலில் உள்ள மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் முதல் மாடியில் தான் பென்ஷன் பிரிவு உள்ளது. எனவே பானுப்பிரியா தனது தாய் ராஜேஸ்வரியிடம் நீங்கள் கீழே நில்லுங்கள், நான் முதல் மாடியில் உள்ள அலுவலகத்திற்கு சென்று விட்டு வருகிறேன் என்று கூறிச் சென்றார். அங்கு சென்றதும் அதிகாரிகளை சந்தித்து பென்ஷன் சம்பந்தமாக கேட்டார். அதற்கு அவர்கள் சில ஆவணங்களை சமர்ப்பிக்க சொன்னார்கள். உடனே அந்த ஆவணங்களை உடனடியாக சமர்ப்பிப்பதாக, கூறி விட்டு புறப்பட்டார். அந்த அலுவலகத்தில் இருந்து சில அடி தூரம் சென்றதும் திடீரென பானுப்ரியாவுக்கு மயக்கம் ஏற்பட்டது. அவர் மயங்கி அப்படியே பின்புறமாக சரிந்தார். இதில் அவருடைய பின்னல் தலையில் பலமாக அடிபட்டது. உடனே அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே பானுப்பிரியா உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்து உக்கடம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அத்துடன் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காவல் துறையினர் கூறும் போது : உயிரிழந்த பானுப்பிரியாவின் மருத்துவ அறிக்கை தொடர்பாக ஆய்வு செய்ததில் அவருக்கு எந்த நோயும் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது என்றும், இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர். மேலும் கோவை மாநகராட்சியின் பிரதான அலுவலகத்தில் தந்தையின் பென்சன் தொடர்பாக விசாரிக்கச் சென்ற போது மகள் திடீரென மயங்கி விழுந்து பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.