• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

குழந்தைகள், கணவரை இழந்த பெண் தற்கொலை!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் நகரில் வசித்து வருபவர் லோகேஸ்வரன். இவரின் மனைவி மீனாட்சி (வயது 27). இந்த தம்பதிகளுக்கு ஜஸ்வந்த் என்ற 8 வயது மகனும், ஹரி ப்ரீத்தா என்ற 6 வயது மகளும் இருந்தனர்..

கடந்த வருடம் இரண்டு குழந்தைகளும் குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த நிலையில், பெற்றோர் பெரும் மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளனர். குழந்தைகளை பறிகொடுத்த துக்கம் தாளாது லோகேஸ்வரன் கடந்த வருடம் தற்கொலை செய்துகொண்டார்!

மீனாட்சி கடம்பூரில் இருக்கும் தாயின் வீட்டில் வசித்து வந்துள்ளார். கணவர் மற்றும் குழந்தைகளை அடுத்தடுத்து இழந்தது அவரின் வாழ்க்கையில் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் மீனாட்சி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த உமராபாத் காவல் துறையினர், மீனாட்சியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.