நாடு முழுவதும் 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறும் முன்பு மாநில அரசுகளை கலந்தாலோசிக்க வேண்டும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
புதுப்பேட்டை பொற்பனைக்கோட்டையில் அகழ்வாராய்ச்சி பணிகளை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ரகுபதி மற்றும் மெய்ய நாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த தங்கம் தென்னரசு..,
இது போன்ற முக்கிய முடிவுகளை எடுக்கும் போது ரிசர்வ் வங்கி மாநில அரசுகளுடன் ஆலோசித்து அறிவிக்க வேண்டும். பண மதிப்பிழப்பு நடவடிக்கை நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக மத்திய அரசு நேற்று அறிவித்த நிலையில் தற்போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.