• Wed. Jan 14th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

வேற லெவல் டீமுடன், மாரி செல்வராஜின் அடுத்த ப்ராஜெக்ட்!!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், வடிவேலு நடிக்கும் புதிய படத்திற்கு மாமன்னன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தின் அறிவிப்பு போஸ்டர் இன்று வெளியானது.

தற்போது அருண் காமராஜ் இயக்கத்தில் ஆர்டிகள் 15 படத்தின் தமிழ் ரீமேக் நெஞ்சுக்கு நீதி படத்தில் நடித்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப் பெரும் வரவேற்பை பெற்றது.

தனது முதல் படமான பரியேறும் பெருமாள் படத்திற்கு பிறகு இரண்டாவது படத்திலேயே தனுஷை வைத்து கர்ணன் என்ற படத்தை இயக்கி இருந்தார் மாரி செல்வராஜ். இந்நிலையில் மாமன்னன் படத்தைத் தொடர்ந்து, நடிகர் விக்ரமின் மகன் துருவுடன் இணைகிறார் என்றும் கூறப்படுகிறது!

இந்த போஸ்டரில் கூட்டமாக மாடுகள் நிற்பதுபோல் மற்றும் பறவைகள் பறப்பது போல் இடம் உள்ளது. மாரி செல்வராஜின் படங்களில் குறியீடுகள் அதிகமாக இருக்கும், அந்த வகையில் இந்தப் படத்திலும் முக்கிய சமூக பிரச்சனையை பேச உள்ளார் என்பது தெரிகிறது. மேலும் போஸ்டரில் முதலில் வடிவேலுவின் பெயரும், பிறகு பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் பெயரும் இடம்பெற்றுள்ளது. அதன்பிறகு உதயநிதி ஸ்டாலின் பெயர் உள்ளது. ரெட் ஜெயிண்ட் மூவிஸ் இந்த படத்தை தயாரிக்க உள்ளனர். மேலும் இதுதான் உதயநிதியின் கடைசி படமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.