

சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் மிகவும் பிரபலமான குமரகிரி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் மலையில் உள்ளது. இந்த கோவிலில் 2009-2010 ஒரு 4.80 லட்சம் செலவில் நமக்கு நாமே என்ற திட்டத்தின் கீழ் புதிய பொலிவுடன் கும்பாபிஷேகம் செய்ய பணி நடந்து கொண்டுள்ளது. ஆனால் ஆமை வேகத்தில் தொய்வு ஏற்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக இதே நிலைமையில் உள்ளது.

சேலம் மக்கள் மிகவும் மன வேதனையில் உள்ளனர். முருகன் கோவிலுக்கு மலைமேல் வாகனங்கள் செல்லக்கூடிய வழியில் போக்குவரத்து ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் தற்போது மழை வந்த காரணத்தினால் சாலையில் பாதி வழி வரைக்கும் மண் அரிப்பு ஏற்பட்டு மிகப்பெரிய பாதாள குறியாக உள்ளது.

இதையும், கோவில் பணியையும் விரைவில் முடித்து வருகிற பங்குனி உத்திரத்திற்கு கோவில் செயல்படுமா? அல்லது புதிய ஆண்டு முடிவதற்குள் செயல்படுமா? என்கின்ற ஆர்வத்துடன் ஆவலுடன் சேலம் மக்கள் இருக்கிறார்கள். புதிதாக வந்துள்ள தமிழக அரசு அறநிலை துறை அமைச்சர் அவர்கள் இதை கண்டு கொள்வார்களா என மக்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.
