

ஆரப்பாளையம்.. AA road, DD ROAD.. பைபாஸ் சாலை காளவாசல் பகுதிகளில்…மாநகராட்சி,போக்குவரத்து காவல் துறையினருடன் இணைந்து போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு களை இன்று காலை18/03/2025 அகற்றினர். மூன்று மாதத்துக்கு ஒரு முறை ஆக்கிரமிப்பு அகற்றி வருகின்றனர். ஒவ்வொரு முறையும் அகற்றி பின்னும் மீண்டும் அடுத்த வாரத்திலேயே மீண்டும் பைபாஸ் சாலை காளவாசல் பழங்காநத்தம் வரையில் சாலையோர கடைகள் ஆக்கிரமிப்பு செய்து விடுகிறார்கள். இது தொடர்கதையாகவே இருக்கிறது இம்முறையாவது மீண்டும்
ஆக்கிரமிப்பு.

மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறைகள் இணைந்து தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இன்று ஆக்கிரமிப்பு போது பாதுகாப்பிற்காக
எஸ் எஸ் காலனி காவல்துறையினர் மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி மற்றும் துணை ஆய்வாளர் சந்தான குமார் ஆகியோர் போக்குவரத்து இடைஞ்சல் ஏதும் ஏற்படாமல் இருப்பதற்கு போக்குவரத்தை சரி செய்தனர்.


