

கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக பழங்காநத்தம் டிவிஎஸ் நகர் ரயில்வே சுரங்கப்பாதையானது பாலம் வேலை நடைபெற்றுக் கொண்டிருந்ததால் முற்றிலுமாக செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் அழகப்பன் நகர் வழியாக சுற்றிச் செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. மேலும் இரண்டு ரயில்வே டிராக் உள்ளதால் அடிக்கடி ரயில்வே கேட் மூடுவதாலும் போக்குவரத்து நெரிசலில் ஏற்பட்டது. இந்த நிலையில் பாலம் வேலை நிறைவு பெற்றது. அடுத்து மீண்டும் பழங்காநத்தம் டிவிஎஸ் நகர் ரயில்வே சுரங்கப்பாதையானது திறக்கப்பட்டு உள்ளது.

இதனால் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் எனவும் என வாகன ஓட்டிகள் கருத்து தெரிவித்தனர். மேலும் பல மாதங்களாக மூடியே இருந்ததால் மணல்கள் அதிக அளவு இருப்பதால் மணலை உடனடியாக அகற்றி வாகன விபத்தில் சிக்காமல் இருப்பதற்கு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றன. மேலும் போதிய வெளிச்சம் இல்லை எனவும் விளக்குகள் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர் .


