• Tue. Mar 19th, 2024

அம்மா அரசு மீட்டு தந்த ஜல்லிக்கட்டு உரிமையை திமுக அரசு பாதுகாக்குமா.?? ஆர்.பி.உதயகுமார் கேள்வி..

Byகாயத்ரி

Sep 30, 2022

தமிழர்களின் வீரத்தின் அடையாளமாக திகழும் ஜல்லிக்கட்டு போட்டியை தடை செய்யப்பட்டபோது, நாடு முழுவதும் இளைஞர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர், தொடர்ந்து அம்மா அரசுக்கு இளைஞர்கள் கரம் கொடுத்தனர்.

அதனை தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, இதற்கு 2017 ஆண்டு ஜனவரி மாதம் ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார், அதனைத் தொடர்ந்து விலங்கு நல வாரியம், பீட்டா அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் நடத்தி வைத்த பெருமை எடப்பாடியாரை சாரும், அதனை தொடர்ந்து மூன்று முறை நடத்தி சாதனை நிகழ்த்தினார்.

தற்பொழுது உச்ச நீதிமன்றத்தில் விலங்கு நல வாரியம் ,பீட்டா அமைப்பு போடப்பட்ட வழக்கில் தொடர் விசாரணை நடைபெற்று வருவது, ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை வந்துருமா என்று அச்சம் விவாதம் மக்களிடத்தில் இருந்து வருகிறது.மூடிய வாடிவாசலை திறந்துவைத்தது அம்மாவின் அரசு, இந்த வாடிவாசலை பாதுகாக்கும் கடமை அரசுக்கு உள்ளது, இப்போது நீதிமன்றத்தில் நடத்தப்பட்டு விவாதம் மக்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது. விளையாட்டு போட்டி மைதானம் அமைக்க அரசு முயற்சித்து வருகிறது, வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு வாடிவாசல் நடைபெறுமா என்று கிராம மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் வருகின்றனர்.வீரத்தின் அடையாளமாக திகழும் ஜல்லிக்கட்டு போட்டி வானம் போன்று எல்லை இல்லாதது, இதை மைதானத்திற்குள், வட்டத்துக்குள் அடக்க முடியாது. தமிழக அரசு தற்போது சட்ட வல்லுநர்களை மூலம் உச்ச நீதிமன்றத்தில் நமது ஜல்லிக்கட்டு உரிமையை தொடர கவனம் செலுத்தி அக்கரை செலுத்த வேண்டும், நமது பண்பாடு, பாரம்பரியம் ஆகியவற்றை உச்ச நீதிமன்றத்தில் எடுத்துரைத்து ஜல்லிக்கட்டின் மகத்துவத்தை காப்பாற்ற வேண்டும் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *