• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

விதை மாற்றுத்திறனாளிகளின் நலச்சங்கம் கோரிக்கைகள் நிறைவேறுமா?

ByS.Navinsanjai

Aug 15, 2022

விதை மாற்றுத்திறனாளிகள் சங்கம் மற்றும் டிசம்பர் 3 இயக்கம் சார்பில் நாட்டின் 75 -வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சி தலைவர்களை சந்தித்து இன்று ஆங்காங்கே நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டங்களில் கலந்து கொண்டு சங்கத்தினர் மனுக்கள் வழங்கினர்.

விதை மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச்சங்கம் மற்றும் டிசம்பர் 3 மாநில அமைப்பு ஆகியவை சார்பில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் வழங்கப்பட்டது. முன்னதாக நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழா வெகு சிறப்பாக கொண்டாடிய இந்த அமைப்பினர், மாவட்ட ஊராட்சி தலைவர்களுக்கு எட்டு அம்ச கோரிக்கைகள் கொண்ட மனுக்களை வழங்கி உள்ளனர். அதில் அந்தந்த ஊராட்சி பகுதிகளில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் புரிய நிலம் ஒதுக்கீடு செய்ய வேண்டும், அதேபோல் அவர்களுக்கு இலவச மனை உடன் கூடிய வீடு வழங்க வேண்டும். மரணமடையும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகளை முழுமையாக காலதாமதம் இன்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு முதியோர் ஓய்வூதிய தொகையினை உடனடியாக வழங்க வேண்டும், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் அவர்களுக்கு ஏதுவான பணிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் மேலும் ஊராட்சிகளில் நேர்முகத் தேர்வு நடத்தி மாற்றுத்திறனாளிகளுக்கு பணியிடம் வழங்க வேண்டும் தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து அடிப்படை வசதிகளிலும் செய்து தரக்கூடிய ஊராட்சி மன்றமாக முன்மாதிரியாக திகழ அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் விதை மாற்றுத்திறனாளிகள் நல முன்னேற்ற சங்கத்தின் தலைவர் ரமேஷ் குமார் செயலாளர் இந்திராணி பொருளாளர் ஜோதிமணி மற்றும் ஏராளமான உறுப்பினர்களும் கலந்து கொண்டனர் ‌.