• Tue. Apr 21st, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

எஸ்.எஸ்.புரம் நம்மால் முடியும் நண்பர்கள் குழு சார்பில் இரத்ததான முகாம் …

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள எஸ். எஸ். புரத்தில் நம்மால் முடியும் நண்பர்கள் குழு சார்பில் எட்டாவது ஆண்டு ரத்ததான முகாம் நடைபெற்றது. .ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று கிராமத்தில் உள்ள வாலிபர்கள் இணைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வழங்குவதற்காக ரத்த தானம் செய்வது வழக்கம். அதன் அடிப்படையில் இந்த ஆண்டு எஸ் .எஸ்.புரத்தில் உள்ள சமுதாய கூடத்தில் இரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமை ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினம் தொடங்கி வைத்தார். ஒப்பந்ததாரர் வேலுச்சாமி முன்னிலை வகித்தார். 70-க்கும் மேற்பட்டோர் முகாமில் ரத்ததானம் வழங்கினார்கள். ரத்த தானம் வழங்கிய நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ வங்கி மருத்துவர் பிரியா தலைமையிலான மருத்துவ குழுவினர் ரத்த சேகரம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நம்மால் முடியும் நண்பர்கள் குழுவினர் செய்திருந்தனர்.