• Sat. Dec 13th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பாஜகவில் இணைவாரா ஓபிஎஸ் -காவித்துண்டு போர்த்தியதால் பரபரப்பு

ByA.Tamilselvan

Jun 27, 2022

அதிமுக தொண்டர்களை பாஜகவுக்கு செல்லமாட்டார்கள் என்று ஓபிஎஸ் குறித்து செல்லூர் கே.ராஜூ விமர்சித்தார். அதே நேரத்தில் டெல்லி சென்று திரும்பிய ஓபிஎஸ் தனது பண்ணை வீட்டில் அவர் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையின்போது தேனி மாவட்ட நிர்வாகிகள் மட்டுமின்றி மதுரை, விருதுநகர், நெல்லை போன்ற வெளிமாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். மேலும் பா.ஜ.க நிர்வாகிகளும் கலந்து கொண்டு அவருக்கு சால்வை போர்த்தி வரவேற்பு தெரிவித்தனர். அப்போது ஒரு பா.ஜ.க நிர்வாகி ஓ.பன்னீர்செல்வத்திற்கு காவிதுண்டு அணிவித்ததால் தொண்டர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. பா.ஜ.க மாநில ஊரகவளர்ச்சி பிரிவு துணைத்தலைவர் ராஜபாண்டியன் தலைமையில் தேனி மாவட்ட தலைவர் பாண்டியன் உள்பட ஏராளமான பா.ஜ.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து வரவேற்பு தெரிவித்தனர்
பாஜக கொடுத்த திட்டமிட்ட படித்தான் ஓபிஎஸ் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளகிறார் என பேசப்படுகிறது. மேலும் ஓபிஎஸ் பாஜக செல்வாரா அல்லது அதிமுகவை கைப்பற்ற பாஜக உதவுமாக என்பதை உதவுமாக என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.