
அதிமுக பொதுக்குழுவை நடத்த பள்ளி,கல்லூரிகளில் அனுமதி கிடையாத என்பதால் இபிஎஸ் தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளது.
கடந்த ஜூன் 23ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு எந்ததீர்மானமும் நிறைவேற்றப்படாமல் முடிவு பெற்றது. இதனால் வரும் ஜூலை 11ல் மீண்டும் பொதுக்குழு என தமிழமகன் உசேன் அறிவித்தார். சென்னையில் வரும் 11 ம்தேதி அதிமுக பொதுக்குழுவை நடத்துவதற்கு இடம் தேர்வு செய்யும் பணிகள்தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.ஜெயின் கல்லூரியில் பொதுக்குழுவை நடத்தலாமா என்பது குறித்து இன்று ஆய்வு மேற்கொண்ட நிலையில் பள்ளி,கல்லூரிகளில் சாதி ,மத. இயக்க செயல்பாடுகள் மற்றும் அரசியில்கட்சி கூட்டங்கள் நடத்துவதற்கு அனுமதி கிடையாது எனக்கூறி இபிஎஸ் தரப்புக்கு உயர்கல்வித்துறை புதிய சிக்கலை எற்படுத்தியுள்ளது. பொதுக்குழுவை நடத்த ஏற்கனவே பல சிக்கல்கள் இருக்கும் நிலையில் மேலும் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது இபிஎஸ் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.