• Tue. Aug 25th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

மோசமான சாலை சீரமைக்கப்படுமா.?

ByKalamegam Viswanathan

Aug 7, 2026

மதுரை கருப்பாயூரணி அருகே பல மாதங்களாக ஜல்லி கற்கள் சாலையில் பரப்பி சாலையில் தார் ஊற்றும் பணி நடைபெறாமல் மக்கள் அவதியடைந்துள்ளனர்.

கருப்பாயூரணி செல்லும் வழியில் சிவகங்கை செல்லும் சாலையில், விக்ரம் மருத்துவமனை எதிரே மஸ்தான் பட்டி கபீர் நகருக்கு செல்லும் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்லும் சாலையில் பல மாதங்களாக ஜல்லி கற்கள் போடப்பட்டு, சாலையானது சீரமைக்க ஆர்வம் காட்டத்தால், இல் வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி பழுது ஆவதும், சாலையில் நடந்து செல்வோர் தடுமாறி கீழே விழும் நிலையும் ஏற்படுவதாக, சமூக ஆர்வலர்கள் மதுரை மாநகராட்சி நிர்வாகத்தை குறை கூறுகின்றனர்.

இது குறித்து அரசு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மஸ்தான்பட்டி சாலையை பார்வையிட்டு, உடனே சீரமைக்க வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.