வருகிற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாக, அதிமுக தலைமைக்கு இடையே அதிமுகவில் தீவிரமான மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்று அதிமுகவினரும் வட்டாரங்களும் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், இந்த தேர்தலில் எதிர்கட்சியான அதிமுக வெற்றி பெற விரும்புகிறது. அதிமுக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டுமானால், கட்சியில் ஒற்றுமை இல்லாவிட்டாலும் தலைமையில் ஒற்றுமை இருக்க வேண்டும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் தொடர்ந்து பத்தாண்டுகள் ஆட்சியில் இருந்தாலும் அதிமுக 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இருந்து அடுத்து வந்த எல்லா தேர்தல்களிலும் தோல்விதான். 2019ம் மக்களவைத் தேர்தலின்போது நடைபெற்ற சட்டமன்ற இடைத் தேர்தலில் போதுமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டாலும் தமிழகத்தில் தேனியைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் அதிமுக தோல்வியைத் தழுவியது.
அடுத்து வந்த 2020ம் ஆண்டு ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அப்போது ஆளும் கட்சியாக இருந்தாலும் திமுகவைவிட குறைவான இடங்களிலேயே வெற்றி பெற்றது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்து ஆட்சியை இழந்தது. அதற்கு பிறகு, நடந்து முடிந்த 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக படுதோல்வியடைந்தது.
இப்படி அதிமுக 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இருந்து அடுத்து வந்த எல்லா தேர்தல்களிலும் தோல்வியை சந்தித்து வருகிறது. வருகிற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று நிரூபிக்க அதிமுக முயற்சி செய்கிறது.
ஆனால், அதிமுகவின் இரட்டைத் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ. பண்ணீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையேயான பிரச்னைகள் அக்கட்சிக்கு முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
அதனால், தமிழகத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்றால், அதிமுக தலைமை ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இடையே ஒற்றுமை இருக்க வேண்டும் என்று கட்சியினர் எதிர்பார்க்கின்றனர்.
அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட வி.கே. சசிகலாவை மீண்டும் கட்சிக்குள் சேர்ப்பதற்கு ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவருமே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில், 9 மாவட்டங்களில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு, ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான ஒரு பிரிவினர் சசிகலாவை கட்சியில் சேர்ப்பது பற்றி மறுபரிசீலனை செய்து வருகின்றனர் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் வி.கே.சசிகலா இருவரும் தென் தமிழகத்தில் பெரும்பான்மையாக உள்ள தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதனால், சசிகலாவை மீண்டும் கட்சிக்குள் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீசெல்வத்திற்கு சமூகத்தில் முக்கிய புள்ளிகள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் சென்னையில் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், கடந்த காலத் தவறுகளை மன்னித்து புதிய தொடக்கம் அளியுங்கள் என்று கூறியது சசிகலாவைக் குறிப்பிட்டுதான் கூறினார் என்று பலரும் கூறினர். ஆனால், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் டி. ஜெயக்குமார், சி.வி. சண்முகம், சசிகலாவைக் கட்சியில் சேர்ப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிமுகவுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்திய தலைவர்கள் கட்சிக்கு தேவையில்லை என்றும் தெரிவித்தனர்.
எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவர்கள் என்று சொல்லப்படும் டி. ஜெயக்குமார், சி.வி. சண்முகம் இருவரின் அறிக்கைகள், சசிகலாவை முற்றிலும் எதிர்க்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவுடனும் ஆசியுடனும் இருப்பதாகக் கருதப்படுகிறது.
- கூடலூர் அருகே கரிய சோலை தொடக்கப்பள்ளியின்வெள்ளி விழாகரிய சோலை தொடக்கப்பள்ளியில் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் கோலாகலமாக நடைபெற்றது. மாணவர்களின் கண்கவர் கலை […]
- என் மக்களுக்காக பணியாற்றுவதை வரமாக கருத்துகிறேன்-நிதியமைச்சர் பி.டி.ஆர். பேச்சு30ஆண்டுகள் வெவ்வேறு நாடுகளில் பணியாற்றிய அனுபவங்களை பெற்று அதை அனைத்தையும் இணைத்து ஐம்பது வயதிற்கு மேல் […]
- ராகுல்காந்தியின் எம்.பி பதவி பறிப்பு -குமரி கிழக்கு,மேற்கு மாவட்டங்களில் தர்ணாராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தகுதி நீக்கம் செய்தபிரதமர் மோடியைகண்டித்து.குமரிகிழக்கு,மேற்கு மாவட்டங்களில் காங்கிரஸ் தர்ணா போராட்டம்.தமிழ் […]
- கணவனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்த மனைவிதிருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன் குளத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் தலையில் கல்லை போட்டு சரமாரியாக […]
- இலவச கண் பரிசோதனை மற்றும் கண் புரை அறுவை சிகிச்சை முகாம்சென்னை சாலிகிராமம் கே.கே.சாலையில் அமைந்துள்ள காவேரி அரசு பள்ளியில் இலவச கண் பரிசோதனைமற்றும் கண் புரை […]
- முதல்வர் , நிதி அமைச்சருக்கு புனித ஜார்ஜ் பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனைபேராலயத்திற்கு வளர்ச்சிப் பணிக்காகவும் , சீரமைப்பு பணிக்காகவும் பட்ஜெட் அறிக்கையில் நிதி ஒதுக்கியதற்கு நன்தெரிவிக்கும் விதமாக […]
- 36ஒன்வெப் செயற்கைகோள்களை வெற்றிகரமாக ஏவிய இஸ்ரோஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ 36 OneWeb செயற்கைக்கோள்களின் (ISRO 36 OneWeb) இரண்டாவது […]
- இன்று இயற்பியலுக்கான முதலாவது நோபல் பரிசு வென்ற வில்லெம் ரோண்ட்கன் பிறந்த நாள்இயற்பியலுக்கான முதலாவது நோபல் பரிசு வென்ற, எக்ஸ் கதிர்களை கண்டுபிடித்த வில்லெம் ரோண்ட்கன் பிறந்த நாள் […]
- டெல்லியில் சத்தியாகிரக போராட்டம்- தடையை மீறி கார்கே-பிரியங்கா பங்கேற்புஇந்தியா முழுவதும் காங்கிரசார் சத்தியாகிரக போராட்டம்- டெல்லியில் தடையை மீறி கார்கே-பிரியங்கா பங்கேற்புபிரதமர் மோடியை ராகுல்காந்தி […]
- விண்ணில் பாய்ந்தது ‘எல்.வி.எம்3-எம்3 ராக்கெட்’வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த எல்.வி.எம்.3 ராக்கெட் செயற்கைகோள்களை சுற்றுவட்டபாதையில் நிலை நிறுத்தியது.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் […]
- பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவேன்- ஓ.பன்னீர்செல்வம்அ.தி.மு.க.வில் பழைய விதிகள் தொடர்ந்தால் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவேன் எனஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்புமயிலாடுதுறை அ.தி.மு.க. ஓ.பி.எஸ். […]
- சோழவந்தான் நகர அரிமா சங்கம் சார்பில் இலவச கண் மருத்துவ முகாம்சோழவந்தான் நகர அரிமா சங்கம் சார்பில்.இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் சோழவந்தானில் நகர […]
- திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் […]
- ‘பருந்தாகுது ஊர்க் குருவி’ – சினிமா விமர்சனம்டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் முன்னணி நிறுவனமாக வலம் வரும் Lights On Media நிறுவனம், தனது […]
- உலக வலிப்பு நோய் தின விழிப்புணர்வு சைக்கிள் பேரணிஉலக வலிப்பு நோய் தின விழிப்புணர்வு சைக்கிள் பேரணியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 500க்கும் […]