• Fri. Apr 19th, 2024

மழையின் காரணமாக காட்டு யானைகள் விரட்டும் பணி தொய்வு; ட்டோன் மூலம் கண்காணிக்கும் வனத்துறையினர்;

By

Aug 31, 2021 ,

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள ஆமைகுளம், புளியம்பாறை, நாடுகாணி உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் மற்றும் 10க்கும் மேற்பட்ட வீடுகளை 2 காட்டு யானைகள் தாக்கி சேதப்படுத்தியதால், அவற்றை விரட்டக் கோரி பாதிக்கபட்ட கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து முதுமலையில் இருந்து 4 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு, காட்டு யானைகளை விரட்டும் பணி 5 நாட்களாக தொடர்கிறது.

குறிப்பிட்ட யானைகள் வெவ்வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து செல்வதாலும், மூடுபனி மற்றும் மழை காரணமாகவும் இப்பணியில் தொய்வு ஏற்பட்டது. அதனால், ட்ரோன் கேமராக்களை பயன்படுத்தி அந்த யானைகளின் இருப்பிடத்தைக் கண்டறியும் பணியை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *